குறள் 520 — தெரிந்து வினையாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 106 · ஸ்கேன் 139 · மூலமும் சான்றும்