பொருட்பால் · அரசியல் · சுற்றந்தழால்

குறள் 530சுற்றந்தழால்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத்திருந் தெண்ணிக் கொளல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 108 · ஸ்கேன் 141 · மூலமும் சான்றும்