பொருட்பால் · அரசியல் · பொச்சாவாமை

குறள் 534பொச்சாவாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப்போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 109 · ஸ்கேன் 142 · மூலமும் சான்றும்