பொருட்பால் · அரசியல் · பொச்சாவாமை

குறள் 536பொச்சாவாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்ப தில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

மூலம் · அச்சுப் பக்கம் 110 · ஸ்கேன் 143 · மூலமும் சான்றும்