பொருட்பால் · அரசியல் · செங்கோன்மை

குறள் 549செங்கோன்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 112 · ஸ்கேன் 145 · மூலமும் சான்றும்