பொருட்பால் · அரசியல் · வெருவந்த செய்யாமை

குறள் 562வெருவந்த செய்யாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

குற்றங்கள் நிகழாமல் இருக்கத் தண்டிக்கும்போது கடுமை காட்டித் தண்டிக்கும்போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 115 · ஸ்கேன் 148 · மூலமும் சான்றும்