பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்

குறள் 578கண்ணோட்டம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்குரிமை உடைத்திவ் வுலகு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமை உடையதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 118 · ஸ்கேன் 151 · மூலமும் சான்றும்