குறள் 593 — ஊக்கமுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்ஒருவந்தங் கைத்துடை யார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 121 · ஸ்கேன் 154 · மூலமும் சான்றும்