பொருட்பால் · அரசியல் · ஆள்வினையுடைமை

குறள் 611ஆள்வினையுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

மூலம் · அச்சுப் பக்கம் 125 · ஸ்கேன் 158 · மூலமும் சான்றும்