குறள் 620 — ஆள்வினையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்தாழா துஞற்று பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
“ஊழ்” என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 126 · ஸ்கேன் 159 · மூலமும் சான்றும்