குறள் 624 — இடுக்கண் அழியாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பா டுடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தடங்கள் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக்கொண்டு போவது போல, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 127 · ஸ்கேன் 160 · மூலமும் சான்றும்