பொருட்பால் · அமைச்சியல் · அமைச்சு

குறள் 637அமைச்சு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்தியற்கை அறிந்து செயல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 130 · ஸ்கேன் 163 · மூலமும் சான்றும்