குறள் 646 — சொல்வன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்மாட்சியின் மாசற்றார் கோள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துகளைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 132 · ஸ்கேன் 165 · மூலமும் சான்றும்