பொருட்பால் · அமைச்சியல் · சொல்வன்மை

குறள் 647சொல்வன்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சொல்லவல்லன் சோர்விலன் அஞ்சா னவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

மூலம் · அச்சுப் பக்கம் 132 · ஸ்கேன் 165 · மூலமும் சான்றும்