பொருட்பால் · அமைச்சியல் · சொல்வன்மை

குறள் 648சொல்வன்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துகளைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 132 · ஸ்கேன் 165 · மூலமும் சான்றும்