பொருட்பால் · அமைச்சியல் · வினைத்தூய்மை

குறள் 655வினைத்தூய்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

‘என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.

மூலம் · அச்சுப் பக்கம் 133 · ஸ்கேன் 166 · மூலமும் சான்றும்