குறள் 669 — வினைத்திட்பம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 136 · ஸ்கேன் 169 · மூலமும் சான்றும்