குறள் 667 — வினைத்திட்பம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி யன்னார் உடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 136 · ஸ்கேன் 169 · மூலமும் சான்றும்