பொருட்பால் · அமைச்சியல் · வினைசெயல்வகை

குறள் 680வினைசெயல்வகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்கொள்வர் பெரியார்ப் பணிந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 138 · ஸ்கேன் 171 · மூலமும் சான்றும்