பொருட்பால் · அமைச்சியல் · தூது

குறள் 689தூது

திருவள்ளுவர் இயற்றிய குறள்

விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 140 · ஸ்கேன் 173 · மூலமும் சான்றும்