பொருட்பால் · அமைச்சியல் · தூது

குறள் 682தூது

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கின்றி யமையாத மூன்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.

மூலம் · அச்சுப் பக்கம் 139 · ஸ்கேன் 172 · மூலமும் சான்றும்