குறள் 685 — தூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதாந் தூது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 139 · ஸ்கேன் 172 · மூலமும் சான்றும்