குறள் 698 — மன்னரைச் சேர்ந்தொழுகல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோ டொழுகப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர்தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 142 · ஸ்கேன் 175 · மூலமும் சான்றும்