பொருட்பால் · அமைச்சியல் · அவையறிதல்

குறள் 716அவையறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 146 · ஸ்கேன் 179 · மூலமும் சான்றும்