குறள் 714 — அவையறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணங் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 145 · ஸ்கேன் 178 · மூலமும் சான்றும்