குறள் 712 — அவையறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 145 · ஸ்கேன் 178 · மூலமும் சான்றும்