குறள் 727 — அவையஞ்சாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்தஞ்சு மவன்கற்ற நூல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 148 · ஸ்கேன் 181 · மூலமும் சான்றும்