பொருட்பால் · அமைச்சியல் · அவையஞ்சாமை

குறள் 724அவையஞ்சாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்றமிக்காருள் மிக்க கொளல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 147 · ஸ்கேன் 180 · மூலமும் சான்றும்