பொருட்பால் · அமைச்சியல் · அவையஞ்சாமை

குறள் 729அவையஞ்சாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 148 · ஸ்கேன் 181 · மூலமும் சான்றும்