பொருட்பால் · அரணியல் · நாடு

குறள் 733நாடு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கிறையொருங்கு நேர்வது நாடு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

புதிய சுமைகள் ஒன்றுதிரண்டு வரும்போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்தி மளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 149 · ஸ்கேன் 182 · மூலமும் சான்றும்