பொருட்பால் · அரணியல் · நாடு

குறள் 732நாடு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 149 · ஸ்கேன் 182 · மூலமும் சான்றும்