குறள் 749 — அரண்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளேயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 152 · ஸ்கேன் 185 · மூலமும் சான்றும்