குறள் 750 — அரண்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்ல தரண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.
மூலம் · அச்சுப் பக்கம் 152 · ஸ்கேன் 185 · மூலமும் சான்றும்