பொருட்பால் · கூழியல் · பொருள் செயல்வகை

குறள் 751பொருள் செயல்வகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்ல தில்லை பொருள்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 153 · ஸ்கேன் 186 · மூலமும் சான்றும்