பொருட்பால் · அரணியல் · அரண்

குறள் 745அரண்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்நிலைக்கெளிதாம் நீர தரண்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 151 · ஸ்கேன் 184 · மூலமும் சான்றும்