குறள் 744 — அரண்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உட்பகுதி பரந்த இடமாக அமைந்து பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 151 · ஸ்கேன் 184 · மூலமும் சான்றும்