பொருட்பால் · கூழியல் · பொருள் செயல்வகை

குறள் 758பொருள் செயல்வகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுண்டாகச் செய்வான் வினை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்ற இலகுவானது.

மூலம் · அச்சுப் பக்கம் 154 · ஸ்கேன் 187 · மூலமும் சான்றும்