குறள் 766 — படைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 156 · ஸ்கேன் 189 · மூலமும் சான்றும்