பொருட்பால் · நட்பியல் · நட்பு

குறள் 787நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 160 · ஸ்கேன் 193 · மூலமும் சான்றும்