குறள் 788 — நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 160 · ஸ்கேன் 193 · மூலமும் சான்றும்