பொருட்பால் · நட்பியல் · நட்பு

குறள் 789நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவதுதான் நட்பின் சிறப்பாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 160 · ஸ்கேன் 193 · மூலமும் சான்றும்