பொருட்பால் · நட்பியல் · நட்பு

குறள் 782நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 159 · ஸ்கேன் 192 · மூலமும் சான்றும்