பொருட்பால் · நட்பியல் · நட்பாராய்தல்

குறள் 795நட்பாராய்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறியவல்லார்நட் பாய்ந்து கொளல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக்கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 161 · ஸ்கேன் 194 · மூலமும் சான்றும்