குறள் 814 — தீ நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
போர்க்களத்தில் கீழே தள்ளிவிட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 165 · ஸ்கேன் 198 · மூலமும் சான்றும்