குறள் 815 — தீ நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்.
மூலம் · அச்சுப் பக்கம் 165 · ஸ்கேன் 198 · மூலமும் சான்றும்