பொருட்பால் · நட்பியல் · தீ நட்பு

குறள் 817தீ நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 166 · ஸ்கேன் 199 · மூலமும் சான்றும்