குறள் 837 — பேதைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.
மூலம் · அச்சுப் பக்கம் 170 · ஸ்கேன் 203 · மூலமும் சான்றும்