பொருட்பால் · நட்பியல் · பேதைமை

குறள் 838பேதைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்கையொன் றுடைமை பெறின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 170 · ஸ்கேன் 203 · மூலமும் சான்றும்