குறள் 858 — இகல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிகலூக்கின் ஊக்குமாங் கேடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 174 · ஸ்கேன் 207 · மூலமும் சான்றும்