பொருட்பால் · நட்பியல் · பகைமாட்சி

குறள் 869பகைமாட்சி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விட்டு வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 176 · ஸ்கேன் 209 · மூலமும் சான்றும்